அமெரிக்காவில் பெண்மணி ஒருவர் இறந்துபோன தனது கணவரின் முகத்தினை வேறாரு நபரின் உடலில் பார்த்து ஆனந்த கண்ணீர் விட்டுள்ளார்.
தனது கணவர் Calen – டன் வசித்து வந்த Lilly Ross 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தற்கொலை செய்துகொண்ட Calen, தனது உடல்பாகங்களை தானமாக வழங்குவதற்கு ஒப்புக்கொண்டார்.
அதன்படி, Lilly Ross தனது கணவரின் உடல் உறுப்புகளை Mayo Clinic என்ற சுகாதார நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளார்.
Calen- இன் முகத்தின கடந்த 2006 ஆம் ஆண்டு துப்பாக்கி சூட்டில் சிக்கிய Andy Sandness என்ற இளைஞருக்கு பொருத்துவதற்கு மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
முகமாற்று அறுவை சிகிச்சையை செய்வதற்கு முன்னர் Mayo Clinic மருத்துவர்கள் சுமார் 30 முறை ஒத்திகை பார்த்துள்ளனர். இறுதியில் 50 மணிநேரம் அறுவை சிகிச்சையானது வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
இந்த தகவல், Rose – க்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து கிளினிக்கு வந்த அவர், தனது கணவரின் முகத்தினை பார்த்து ஆனந்த கண்ணீர் விட்டுள்ளார், மேலும் Andy யின் முகத்தினை தனது கைகளால் தொட்டு பார்த்து கட்டியணைத்துக்கொண்டது பார்ப்பவர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சிகிச்சை குறித்து Andy Sandness கூறியதாவது, 21 வயதில் நான் எனது முகத்தினை தொலைத்துவிட்டேன். தற்போது அறுவை சிகிச்சையால் நான் நலம் பெற்றுள்ளேன், இதனை விவரிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை.
இனிமேல் தான் நான் சந்தோஷமாக வாழப்போகிறேன் என கூறியுள்ளார்.