ஜெர்மனியில் போர் அடிக்கிறது என்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்டோரை கொன்றுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஜெர்மனியின் பெர்லினில் நகரில் உள்ள நீல்ஸ் ஹோகெல் என்பவர் 15 ஆண்டுகளாக செவிலியராக இருந்துள்ளார். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு நேயாளி ஒருவருக்கு விஷ ஊசி போடுவதை கண்ட பெண் செவிலியர் ஒருவர் இதுகுறித்து பொலிசில் புகார் அளித்துள்ளார்.
இதனால் கைது செய்யபட்ட அவரிடம் விசாரணை நடத்திய போது போர் அடிக்கிறது என்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகளை கொன்றது தெரியவந்துள்ளது.
Delmenhorst மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் இருக்கும் நோயாளிகளுக்கு விஷ ஊசி போட்டு அவர்களை மரணத்தின் விளிம்புவரை கொண்டு சென்று மீண்டும் பிழைக்க வைத்துள்ளார். ஆனால் அவர்களில் நூற்றிற்க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அதில் 30க்கும் மேற்பட்டோர் எப்படி துடிதுடித்து இறந்தனர் என்று ரசனையோடு விசாரனையின் போது தெரிவித்தாக பொலிசார் கூறியுள்ளனர்.