இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் “கல்வி முன்னுள்ள சவால்களை எதிர்கொள்ளல்” (Challenges In Education – Way Forward) என்ற தேசிய கருத்தரங்கம் இன்று சென்னையில் நடைபெற்றது.
இதில் இந்தியா முழுவதிலும் இருந்து பல கல்வியாளர்கள், மருத்துவர்கள், எழுத்தாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், மாணவர் அமைப்பினர் கலந்து கொண்டனர்.
எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, முன்னாள் நீதிபதி திரு. அரி பரந்தாமன், மூத்த கல்வியாளர் முனைவர். எஸ்.எஸ்.ராஜகோபாலன், அகில இந்திய கல்வி உரிமைக்கான கூட்டமைப்பின் தலைமைக்குழு உறுப்பினர், பேராசிரியர். அனில் சட்கோபால், தமிழ்நாடு திட்டக்குழுவின் முன்னாள் துணைத்தலைவர், பேராசிரியர் எம்.நாகநாதன், SBOA பள்ளிகளின் தாளாளர், தாமஸ் பிராங்கோ, இயக்குநர் பா.இரஞ்சித், தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு இயக்கத்தின் தலைவர் C.S. ரெக்ஸ் சற்குணம், மருத்துவர் ஜே.அமலோற்பவ நாதன், மருத்துவர் அனுரத்னா, குடியாத்தம் அரசு கலைக்கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் சிவக்குமார், பொறியாளர், எழுத்தாளர் பி.கே.ராஜன், தமிழ்நாடு கல்வி உரிமைக்கான பாதுகாப்பு கூட்டமைப்பினை சார்ந்த பேராசிரியர் என்.மணி, நாடகவியலாளர் பிரளயன், மருத்துவர் எஸ்.காசி, மருத்துவர் எழிலன், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த முனைவர். சி. லட்சுமணன், பெங்களுரு இந்திய அறிவியல் நிறுவன ஆய்வு மாணவர் எஸ்.ஸ்ரீநாத், தி.மு.க. மாணவர் அணியைச் சேர்ந்த CVMP எழிலரசன், தலித் மாணவர் கூட்டமைப்பினைச் சேர்ந்த ஏ.பிரான்சிஸ், முஸ்லிம் மாணவர் கூட்டமைப்பினைச் சேர்ந்த பழவேற்காடு எம்.அன்சாரி, முற்போக்கு மாணவர் கழகத்தினைச் சேர்ந்த பாரதி பிரபு, இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த வி.மாரியப்பன், அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினை சேர்ந்த எஸ்.தினேஷ், திராவிடர் மாணவர் கழகத்தைச் சேர்ந்த பிரின்ஸ் என்னாரஸ் பெரியார், முன்னாள் துணைவேந்தர் வி.வசந்திதேவி, அகில இந்திய கல்வி உரிமைக்கான கூட்டமைப்பின் தலைமைக்குழு உறுப்பினர் பேராசிரியர் G.ஹரகோபால், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியைச் சேர்ந்த கே.சாமுவேல்ராஜ், தமிழ்நாடு பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் சார்பாக P.B.பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்பட பலர் கலந்துகொண்டு உரையாற்றினார்
கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
முக்கிய தீர்மானங்கள் மட்டும் இங்கே:
1. நீட் ரத்து செய்யப்பட வேண்டும்.
2. அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு விகிதாச்சாரத்திற்கு ஏற்ப தனி ஒதுக்கீடு
3. கல்வியை மாநிலப் பட்டியலுக்குள் திரும்பவும் சேர்க்க வேண்டும்.
4. கல்வியை உலக வர்த்தக நிறுவனத்தின் வரம்புக்குள் கொண்டு செல்லக்கூடாது.