Loading...
உள்ளூராட்சி சபை தேர்தல்களுக்காக அரசியல் கட்சிகளால் சமர்ப்பிக்கப்படும் வேட்பு மனுக்களில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். 25 வீத பெண் வேட்பாளர்கள் உள்ளடக்கப்படாத வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படும் என்று உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தப்பா தெரிவித்துள்ளார்.
Loading...
பெண் வேட்பாளர்களுக்கு தகுந்த இடத்தை வழங்க அரசியல் கட்சிகளின் தலைவர்கள் முன்வர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அதேவேளை உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான அரச வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...