Loading...
ரஜினி நடிப்பில் 2.0, காலா என்ற இரண்டு பிரம்மாண்ட படங்கள் வெளியாக இருக்கிறது. முதலில் 2.0 படம் தான் வெளியாகும் என ரஜினியே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
படம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகும் என எதிர்ப்பார்த்தால் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக படம் ஏப்ரலில் வெளியாகும் என்று படக்குழு தரப்பில் கூறப்பட்டது.
Loading...
துபாயில் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றதை தொடர்ந்து நம்பவர் 22ம் தேதி ஹைதராபாத்தில் டீஸர் ரிலீஸ் மற்றும் டிசம்பர் 12ம் தேதி சென்னையில் டிரைலர் வெளியீடு என்று கூறப்பட்டது. ஆனால் படத்தில் சில VFX வேலைகள் இன்னும் மீதம் இருப்பதால் இந்த டீஸர், டிரைலர் ரிலீஸ் பிளான் தள்ளிப்போய்யுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வந்துள்ளது.
இந்த தகவல் ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தத்தை அளித்துள்ளது.
Loading...