ஈரான்-ஈராக் நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள வடக்கு எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.3 ஆக பதிவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேற்கு ஈரானின் கெர்மன் மாகாணத்தில் சுமார் 129 பேர் உயிரிழந்திருக்கக் கூடும் என அதிகாரிகள் அரசு ஊடகத்திடம் தெரிவித்துள்ளனர்.
ஈராக்கில் ஆறு பேர் உயிரிழந்ததாகவும், இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
நிலநடுக்கத்தால் அச்சமடைந்த மக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
இரானின் வடகிழக்கு எல்லைக்கு அருகில் உள்ள ஹலாபஜாவின் தென்மேற்கிலிருந்து 19 மைல்கள் (30 கி.மீ.) தொலைவில், இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.