கனடாவில் புதுமையான முறையில் வேலை வாய்ப்புக்களை அதிகரிப்பது தொடர்பில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பேஸ்புக் நிறுவனத்தின் முதன்மை செயற்பாட்டு அலுவலகரான செரில் சாண்ட்பெர்க் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
நேற்றைய தினம் கனடாவிற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்த செரில், கனடா பிரதமருடன் விசேட சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டார்.
இதன் போது கனடாவில் வேலைவாய்ப்புக்களை அதிகரிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்திப்பு தொடர்பில் ட்ரூடோ தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவேற்றியுள்ளார்.
அதில், செரிலுடனான சந்திப்பு மிகவும் சிறப்பானதாக அமைந்தது எனக் குறிப்பிட்டுள்ள ட்ரூடோ, கனடாவில் அதிக வேலைவாய்ப்புக்களை வழங்குவது தொடர்பில் ஆராய்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.