தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்து விட்டார் என்பதற்குரிய மரணச் சான்றிதழ் கடந்த அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை என மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
எனவே மரணச் சான்றிதழை வழங்கினால், பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதனை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் என்றும் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது பிரபாரகனுக்கு நிகராக அனைவராலும் பேசப்படும் தலைவராக இரா.சம்பந்தன் திகழ்கின்றார் என தெரிவித்த மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் சம்பந்தன்; கட்சிகளை உடைக்காது, 2020 ற்குள் தீர்வினைப் பெறுவதற்கான செயற்பாட்டினை முன்னெடுக்க வேண்டுமென விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து சில கட்சிகள் வெளியேறி மாற்றுக்கட்சியினை உருவாக்குவதற்கு திட்டமிட்டுள்ளனர். மாற்றுக்கட்சி உருவாதனை ஏற்றுக்கொள்கின்றீர்களா என ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், வடகிழக்கில் தமிழீழம் கோரி, தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தினை முன்னெடுத்து, அந்த போராட்டம் நிராகரிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் எமது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என்ற நிலை உருவாகியுள்ளது.
போர் முடிவுற்றதாக கூறிக்கொண்டுள்ள கடந்த கால அரசாங்கம் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றாரா என்பதனை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மேலும் தெரிவித்தள்ளார்.
அத்துடன் யுத்தம் நிறைவடைந்த நிலையில், இன்று எமது தலைவராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனே, எமது நாட்டிலும், புலம்பெயர் நாட்டிலும் உள்ள மக்களுக்காக எமது தலைவராக உருவாகியுள்ளதாகவும் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் பெருமிதம் வெளியிட்டுள்ளார்.
தமிழ் மக்களின் தனித் தீர்விற்காக அரசாங்கத்துடன் விட்டுக்கொடுத்து வருகின்றார். இனியொரு தலைவரை இங்கு எதிர்பார்க்கவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஊடாகவே எமது தீர்வினைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வலியறுத்தியுள்ளார்.