Loading...
கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மக்கள் இன்று போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், நீண்ட காலமாக வீதி புனரமைப்பு மேற்கொள்ளப்படாத நிலையில், இது தொடர்பில் பல முறை உரியவர்களுக்கு அறிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.
கிராம மக்கள் மற்றும் கிராம மட்ட அமைப்புகள் இணைந்து குறித்த போராட்டத்தை மேற்கொண்டிருந்த நிலையில், போராட்டகாரர்கள் புலவுப்பளையிலிருந்து பச்சிலைப்பள்ளி பிரதேசம் வரையில் சென்றிருந்தனர்.
Loading...
இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கான கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்று பிரதேச செயலாளரிடம் போராட்டம் மேற்கொண்டவர்களால் கையளிக்கப்பட்டுள்ளது.
Loading...