தீவகப் பகுதியில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் முயற்சியில் கற்றாளை செய்கைத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என யாழ்ப்பாண மாவட்டச் செயலக விவசாயப் பணிப்பாளர் திருமதி எஸ்.கைலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பாக தெரிவித்ததாவது:
யாழ்ப்பாணம் தீவகப் பகுதியில் உள்ள விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் நாம் பல முன்னேற்றத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.
அந்த வகையில் தற்போது தீவகத்தில் கற்றாளைச் செய்கையை ஊக்குவிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். இந்த முயற்சியின் முதற் கட்டமாக வேலணை மற்றும் நெடுந்தீவுப் பிரதேசங்களில் கற்றாளை நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் ஆரம்ப கட்டமாகப் பிரதேச செயலகங்கள் ஊடாக விவசாயிகள் தெரிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு குறித்த பயிர்ச்செய்கை தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
வேலணை பிரதேச செயலகப் பிரிவில் 23 விவசாயிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு பிரதேச செயலகர் பிரிவில் 16 விவசாயிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான பயிற்சிகள் அனைத்தும் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்டச் செயலக விவசாயப் பணிப்பாளர் திருமதி எஸ்.கைN;லஸ்வரன் தெரிவித்துள்ளார்.