காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நாளை ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்திப்பிற்கு 8 மாவட்டங்களையும் சேர்ந்த பிரிதிநிதிகளாக 31 பேர் இன்று செல்லவுள்ளதாக, கிளிநாச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாதம் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதியிடம் கலந்துரையாடுவதற்காக நேரம் ஒதுக்க வேண்டும் என, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது
அதற்கு விரைவில் பொருத்தமான திகதி ஒன்றை அறிவிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.
அதன்பிரகாரம் நாளை நண்பகல் ஜனாதிபதியுடனான சந்திப்பினை ஜனாதிபதி செயலகம் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்திப்பிற்காக தாம் நாளை செல்லவுள்ளதாகவும், இதற்கு ஏற்பாடு செய்திருந்த ஜனாதிபதியின் செயற்பாடானது வரவேற்கத்தக்கது எனவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு தம்மை அழைத்த ஜனாதிபதி நல்லதொரு பதிலை தருவார் என்று எதிர்பார்த்துள்ளதாகவும் அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.