Loading...
குறித்த அரச தொலைக்காட்சியில் தோன்றிய அந்நாட்டு ராணுவ அதிகாரி அறிக்கையை வாசித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சிம்பாப்வேவில் அரசியல் நெருக்கடி வளர்ந்து வரும் நிலையில் அந்நாட்டு ராணுவ வீரர்கள், அரசு தொலைக்காட்சி நிறுவனமான இசட்.பி.சியின் தலைமை அலுவலகத்தைக் கைப்பற்றியுள்ளனர்.
தொலைக்காட்சியில் தோன்றிய ராணுவத்தினர்,”குற்றவாளிகளை குறிவைத்து’ தாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிக்கையை வாசித்தனர்.
Loading...
இது, அரசைக் கைப்பற்றும் ராணுவ நடவடிக்கையல்ல எனக் கூறியுள்ள ராணுவத்தினர், ஜனாதிபதி ராபர்ட் முகாபே பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் சிம்பாப்வேயின் தலைநகரான ஹராரேவில் நடந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Loading...