அமெரிக்காவின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து எந்த நேரத்திலும் அணு ஆயதத் தாக்குதலை முன்னெடுக்க வடகொரியா தயாராக உள்ளதாக ரஸ்ய ஜனாதிபதி புடினுக்கு எழுதிய கடிதத்தில் ஹிம் ஜோங் உன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வடகொரியாவின் இந்த அச்சுறுத்தும் கடிதத்தை சிறப்பு அதிகாரி ஒருவர் ரஸ்யாவுக்கு நேராகச் சென்று அளித்துள்ளதாகக் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனையடுத்தே ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், அமெரிக்க மற்றும் வடகொரிய நாடுகள் கட்டுப்பாட்டுடன் இருக்கவும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வுக்கு எத்தணிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் வடகொரியாவின் குறித்த கடிதமானது, அமெரிக்கா மீதான வடகொரிய தாக்குதலுக்கான 51 சதவீத சாத்தியத்தை உறுதி செய்துள்ளதாக அமெரிக்க இராணுவத் தளபதி ஒருவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
மேலும், சீனாவும் அதி நவீன ஆயுதங்களுடன் போருக்கான தயார் நிலையில் உள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.