ஏற்றுமதி பொருளாதாரத்தில் கடந்த 10 வருடமாக ஆட்சி செய்த மஹிந்த அரசு கவனம் செலுத்தவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில் ‘தெற்காசியாவின் 2017 வர்த்தக கண்காட்சி நிகழ்வினை இன்று ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே ரணில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து ரணில் கருத்து தெரிவிக்கையில்
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன வர்த்தக வலயங்களை ஆரம்பித்து வெளிநாட்டு முதலீட்டுகளை இலங்கைக்கு கொண்டு வந்ததைப் போலவே ஜனாதிபதி ஆர்.பிரேமதாச ஆடை தொழிற்சாலைகள் மற்றும் வெளிநாட்டு ஹோட்டல் வியாபாரங்களை ஆரம்பித்து எமது நாட்டு இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பை பெற்றுக்கொடுத்தார்.
அதேப்போல் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாநாயக்க ஆடைத் தொழிற்துறை மட்டும் ஹோட்டல் வர்த்தகம் ஊடாக இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்தாலும், கடந்த 10 வருடமாக நாட்டை ஆட்சி செய்த மஹிந்த ராஜபக்ஸ இதுதொடர்பில் அக்கறையின்றி செயற்பட்டதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.