Loading...
இலங்கையின் மனித உரிமை தொடர்பான அறிக்கை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின், அகில மீள் பரிசீலனை செயற்பாட்டுக் குழுவின் பரிசீலனைக்காக நேற்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஸ டி சில்வா இலங்கை தூதுக்குழுவுக்கு தலைமை தாங்கி உரையாற்றினார்.
Loading...
இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்க நடைமுறை சார்ந்த விபரங்களை சரியாக புரிந்துகொண்டு செயற்படுகின்றமை தொடர்பில் உலக நாடுகளுக்கு நன்றி தெரிவிப்பதாக அவர் இதன்போது குறிப்பிட்டார்.
அத்துடன், சுமார் 90 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க வேலைத் திட்டத்தை பாராட்டி கௌரவித்ததாக ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார்.
Loading...