வேலை முடிந்து வீடு திரும்பிய பெண்ணின் கையைப் பிடித்து இழுத்த நபரை காவலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் கைதடியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது.
அலுவலகமொன்றில் கடமையாற்றும் 26 வயதுப் பெண் கடமை முடிந்து சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளையிலே சாலையில் நின்ற நபர் பெண்ணின் கையைப் பிடித்து இழுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண் கொடுத்த முறைப்பாட்டையடுத்து குறித்த நபரை நேற்றுமுன்தினம் கைது செய்த பொலிஸார் இளம் பெண்ணை பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டுடன் சாவகச்சேரி நீதிமன்றில் முற்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிவான் நபரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.