அமெரிக்கா மற்றும் ஹெய்ட்டி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான தற்காலிக பாதுகாப்பு ஏற்படுகளையும் அமெரிக்கா நீக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், கனடாவிற்குள் செல்லும் தஞ்சக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக, கனடாவிற்குள் வரும் தஞ்சக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், குறித்த எதிர்வுகூறல் கனேடிய எல்லை பாதுகாப்பு அதிகாரிகளை அச்சமடைய வைத்துள்ளது.
இவ்வாறு தற்காலிக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள சுமார் மூன்று இலட்சம் ஹெய்ட்டிய மற்றும் மத்திய அமெரிக்க நாட்டவர்கள், அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தல் அச்சுறுத்தலை எதிர்நோக்க நேர்ந்ததால், அவர்கள் கனடாவிற்குள் பெருமளவில் நுழைய எத்தனிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, சில நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குள் வருவோருக்கான தற்காலிக தடைகள் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.