ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் நடைபெற்ற அரசியல் கூட்டத்தை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் நடைபெற்ற அரசியல் கூட்டத்தை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகரான காபுல் நகரின் கைர் கானா பகுதியில் ஒரு உணவகம் அமைந்துள்ளது. இந்த உணவகத்தின் அருகே இன்று இன்று மதியம் ஜமியத்-இ-இஸ்லாமி கட்சி சார்பில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் ஆப்கானிஸ்தான் அதிபர் அஸ்ரப் கானியின் முன்னாள் அலோசகர் உட்பட அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது சுமார் 1:30 மணியளவில் அந்த கூட்டத்திற்குள் நுழைந்த ஒரு தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தான். இதையடுத்து அப்பகுதியில் இருந்த மக்கள் அலறியடித்து கொண்டு ஓடினர். இந்த வெடிகுண்டு தாக்குதலில் பலர் படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குதலில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என பொலீசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
எனினும் இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.