Loading...
அபு தாபியில் நடைபெற்ற உலக சுகாதார அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குறித்த மாநாட்டில் கலந்து கொண்ட உலகின் பிரபலமான நபரான பில் கேட்ஸை சந்தித்துள்ளார்.
Loading...
இதன்போது இலங்கையில் சுகாதார சேவையை மேம்படுத்துவதற்காக அமைச்சர் ராஜித சேனாரத்ன முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் தான் அறிந்திருந்ததாகவும், குறித்த வேலைத்திட்டங்களை எதிர்காலத்தில் மேற்கொள்வதற்குத் தான் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அமைச்சர் ராஜிதாவிடம் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளதாக அமைச்சர் ராஜிதாவின் ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது
Loading...