வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் ஓய்வூதியக் கொடுப்பனவினை வழங்க முடியும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.
கடந்த வருட வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டதற்கமைய ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்குவது தொடர்பில் சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து வெ ளிநாடு சென்ற தொழிலாளர்களுக்கே இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது எனவும், மாறாக சட்டவிரோதமான முறையில் வெ ளிநாடு செல்பவர்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படமாட்டாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடு சென்று பல்வேறு துன்புறுத்தல்களுக்கு முகம் கொடுத்த 19 பேருக்குக்காக 60,00,000 ரூபா பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.