இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 74 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இந்நிலையில் இலங்கை பந்துவீச்சாளர் லக்மல் சாதனை புரிந்துள்ளார்.
நேற்று ஓட்டமேதும் கொடுக்காமல் பந்துவீசிய சுரங்கா லக்மல், 46 பந்துகளுக்குப் பின்னரே ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். கொடுத்தார். அவருடைய பந்தில் ரஹானே ஒரு பவுண்டரி அடித்து கணக்கை ஆரம்பித்தார்.
2001ம் ஆண்டுக்கு பின்னர் தொடர்ந்து 7 ஓவர்கள் மெயிடனாக வீசி, 46 பந்துகளுக்குப் பிறகு ஓட்டங்களை கொடுத்த ஒரே வீரர் – லக்மல் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார்.
இதேவேளை 2015ம் ஆண்டில் ஜெரோம் டெய்லர், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 40 பந்துகள் வீசிய நிலையில் ஓட்டங்கள் எதுவும் கொடுக்காமல் வீசினார்.
இதற்கு முன்பு லக்மல், 2014-ல் கேலேவில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக 27 பந்துகளில் ஓட்டங்கள்; எதுவும் கொடுக்காமல் இருந்தார். அதன்பிறகு இப்போது 46 பந்துகளில் ஓட்டங்கள்; எதுவும் கொடுக்கவில்லை.
முதல் 6 ஓவர்களில் ஓட்டங்கள் எதுவும் கொடுக்காமல் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள்:
3 – லக்மல் (இலங்கை) – 2017-ல் இந்தியாவுக்கு எதிராக
2 – மார்டின் (இங்கிலாந்து) – 1995-ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக
2 – டஃப்பி (நியூஸிலாந்து) – 2002-ல் இந்தியாவுக்கு எதிராக
அத்துடன் லக்மல் டெஸ்ட் போட்டியின் முதல் பந்தில் விக்கெட்டை வீழ்த்தியது இது 2-ஆவது முறையாகும்.
முன்னதாக, கடந்த 2010-ஆம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற போட்டியில் மேற்கிந்திய தீவுகளின் கிறிஸ் கெயிலை அவர் இவ்வாறு வீழ்த்தியிருந்தார் என்பதும் குறிப்பிடதத்க்கது.
இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் முதல் பந்தில் விக்கெட் வீழ்த்திய முதல் இலங்கை வீரர் என்ற பெருமையை சுரங்கா லக்மல் பெற்றுள்ளார்.
முன்பு எந்த இலங்கை பந்துவீச்சாளரும் அவ்வாறு விக்கெட் வீழ்த்தியதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.