இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் பிரிவில் படித்து பட்டம் பெற்றுள்ளார்.
பிறகு மேல் படிப்புக்காக அமெரிக்கா சென்றார். தற்போது அவர் அங்குள்ள மாசாசூட்ஸ் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பு படித்து வருகிறார்.
படித்துக் கொண்டே புதிய சாப்ட்வேர்களை உருவாக்கும் பணிகளிலும் அக்சயா ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் அவர் சிகரெட், பீடி, சுருட்டு போன்ற புகைப் பழகத்தில் ஒருவர் தன்னை விடுவித்து கொள்வதற்கான அதிநவீன சாப்ட்வேரை உருவாக்கியுள்ளார்.
ஒருவர் சிகரெட் புகைக்க வேண்டும் என்று நினைத்தவுடன் எதற்காக அந்த எண்ணம் தோன்றியது என்பதை அந்த சாப்ட்வேர் சொல்லி விடும். அது மட்டுமின்றி புகை பிடிப்பதை தடுக்கும் வகையில் எச்சரிக்கை அறிவுறுத்தல்களையும் அந்த சாப்ட்வேர் சொல்லும்.
இதன் மூலம் நாளடைவில் புகைபிடிக்கும் பழக்கத்தில் இருந்து ஒருவர் விடுதலை பெற முடியும் என்று அக்சயா கூறுகிறார். இந்த சாப்ட்வேரை இன்னும் 4 மாதங்களில் சந்தையில் அறிமுகப்படுத்த அவர் திட்டமிட்டுள்ளார்.
இதை பாராட்டி போர்ப்ஸ் பத்திரிகை அக்சயாவை இளம் கண்டுபிடிப்பாளர்களில் ஒருவராக தேர்வு செய்து பாராட்டி உள்ளது.