கொல்கத்தாவில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 172 ஓட்டங்களில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்துள்ளது.
நேற்று முன்தினம் தொடங்கிய இந்த போட்டியில் இலங்கை அணி தலைவர் சந்திமால் நாணய சுழற்சியில் வென்று களத்தடுப்பை தேர்வு செய்தார்.
இந்திய அணி 11.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 17 ஓட்டங்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கிட்டது. இதனால் முதல் நாள் ஆட்டம் அத்துடன் முடித்து வைக்கப்பட்டது. 2-வது நாளும் அடிக்கடி மழை பெய்ததால் இந்தியா 21 ஓவர்கள் மட்டுமே துடுப்பெடுத்தாட செய்தது.
அதன்படி போட்டியின் இன்றைய நாளில் 172 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்துள்ளது.
இலங்கை அணி சார்பாக அதிகபட்சமாக சுரங்க லக்மால் 26 ஓட்டங்களுக்கு 04 விக்கட்டுக்களையும், தசுன் சானக 36 ஓட்டங்களுக்கு 02 விக்கட்டுக்களையும் வீழ்த்தியுள்ளனர்.