தவறுகள், குறைபாடுகள் இருந்தாலும் தம்மிடம் ஒழிவு மறைவு இல்லை என பிரதமர் ரணில் தெரிவித்துள்ளார்.
எனவே நல்லாட்சி அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து செலவதாகவும் பிரதமர் ரணில் விசக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தினம் சாட்சியம் ஒன்றை வழங்குவதற்காக பினைமுறிமோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகிய பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே ரணில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் தம்மிடம் தெளிவான பதில்கள் இருப்பதன் காரணமாக கட்சியின் தலைவர், செயலாளர், மற்றும் அமைச்சர்கள் தைரியமாக விசாரணைகளை முகம் கொடுத்ததாகவும் தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தெளிவான பதில்களை வழங்க முடிந்ததாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை பினைமுறி மோசடி தொடர்பான விசாரணைகளின் சாட்சியம் பெறுவதில் ஓர் அங்கமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பினைமுறி மோசடி விசாரணை பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.