அவுஸ்திரேலியாவில் பிரஜாவுரிமைக்கான தகுதியை பெறாது முகாம்களில் உள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண சபையில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு; பதில் அளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்றபோது கைது செய்யப்பட்ட நபர்கள் முகாம்களில் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்மஸ் தீவில் உள்ள முகாமில் இருந்து 12 இலங்கையர்கள் பப்புவா நியூகினியாவுக்கும் 21 பேர் அவுஸ்திரேலியாவில் உள்ள மத்திய பிரதேசத்திற்கும், 70 பேர் நவூரில் முகாமுக்கும், 94 பேர் முகாமிலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே அவர்களை மீண்டும் நாட்டிற்கு திருப்பி அழைப்பதற்கு தேவையான விமான சேவைகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் திலக் மாரப்பன நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் இணைந்து இதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும்; அமைச்சர் மேலும் தெரிவித்தார்.