நாட்டில் இடம்பெறும் குற்றச்செயல்கள் குறைவடைந்திருப்பதாக சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் குற்றச்செயல்கள் குறைவடைந்துள்ளதாகவும் சாகல ரத்னாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
2014ம் ஆண்டில் 50 ஆயிரத்து 962 பாரிய குற்றச்செயல்கள் பதிவாகியிருந்தன.
2016ம் ஆண்டில் இது 36 ஆயிரத்து 937 குறைவடைந்துள்ளது. இது 37 சதவீதமாகக் குறைவடைந்துள்ளது.
2017ம் ஆண்டில் முதல் 10 மாத காலத்தில் இடம்பெற்ற பாரிய குற்றச்செயல்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 350 ஆக குறைவடைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலர் நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாகத் தெரிவித்திருந்த போதிலும் குற்றச்செயல்கள் தொடர்பில் ஊடகங்களில் செய்திகளை வெளியிடுவது அதிகரித்திருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2014ம் ஆண்டில் பாரிய குற்றச்செயல்கள் தொடர்பான வழக்குகளை 50 வீதம் தீர்க்க முடிந்துள்ளது. 2017ம் ஆண்டில் இதனை 72 சதவீதமாக அதிகரிக்க முடிந்தது. இது பொலிஸ் தரப்பில் பெறப்பட்ட பாரிய முன்னேற்றமாகும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.