சிம்பாப்வே ஜனாதிபதி ராபர்ட் முகாபேவை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானம் இன்று, நாடாளுமன்றத்தில் முன்மொழியப்படும் என சியான சானு-பி.எஃப் கட்சி தெரிவித்துள்ளது.
இன்னும் இரண்டு நாட்களில் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவரது பதவி பறிக்கப்படும் என்றும் அவரது கட்சியான சானு-பி.எஃப் கட்சி தெரிவித்துள்ளது.
அவரை பதவி விலகுவதற்காக கட்சி விதித்திருந்த காலக்கெடு முடிவடைந்துள்ளதைத் தொடர்ந்து, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகாபேவின் மனைவியான கிரேஸ் முகாபேவை ‘அரசியல் சாசன அதிகாரத்தைக் கைப்பற்ற அனுமதித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிவாகியுள்ளது.
அவரால் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு நாட்டை விட்டு வெளியேறிய, முன்னாள் துணை அதிபர் எமர்சன் மனங்காக்வாவை முகாபே சந்திப்பார் என்றும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.