இந்தியாவின் ராணுவ ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனம் தயாரித்துள்ள பிரமோஸ் அதிவேக (சூப்பர் சோனிக்) ஏவுகணை சோதனை நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘சுகோய் போர் விமானத்தில் இருந்து முதல் முறையாக நடத்தப்பட்ட பிரமோஸ் அதிவேக ஏவுகணை வெற்றிகரமாக நடந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த குறிப்பிடத்தக்க சாதனையை படைப்பதற்கு பங்காற்றிய அனைவருக்கும் வாழ்த்துகள்’ என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பாதுகாப்பு அமைச்சரான நிர்மலா சீதாராமன் தனது டுவிட்டர் பதிவில், ‘பிரமோஸ் அதிவேக ஏவுகணை சோதனை மூலம் உலக சாதனை படைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த வரலாற்று சாதனையை நிகழ்த்திட்ட ராணுவ ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனம் மற்றும் பிரமோஸ் அதிகவேக ஏவுகணையை உருவாக்கிய அணியினர் அனைவருக்கும் எனது பாராட்டுகள்’ என்று நிர்மலா சீதாராமன் மேலும் தெரிவித்துள்ளார்.