முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவை கைது செய்வதற்கான அனுமதி உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.
கோத்தபாயவின் கைது தொடர்பில் சட்ட மா அதிபர், பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
டி.ஏ. ராஜபக்ஸ நினைவுத் தூபியை நவீனமயப்படுத்துவதற்காக 900 இலட்சம் ரூபா மக்கள் பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக கோத்தபாய மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக இந்தப் பணம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத்தின் பணத்தைக் கொண்டு டி.ஏ ராஜபக்ஸ சமாதி புனரமைக்கப்பட்டு அலங்காரப்படுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் 250 இலட்ச ரூபா மீளச் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் கோதபாயவை கைது செய்ய வேண்டாம் என அரசாங்கத்திலுள்ள பலர் அழுத்தங்களை பிரயோகித்து வருவதாக கொழும்புத் தகவல் தெரிவிக்கின்றன.