Loading...
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக சந்திக்க ஹத்துருசிங்க நியமிக்கப்படவுள்ளார்.
குறித்த தகவலை, இலங்கை கிரிக்கெட் சபை உறுதிசெய்துள்ளது.
இது தொடர்பில் நேற்றைய தினம் சந்திக்க ஹத்துருசிங்க மற்றும் இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னரே குறித்த தகவல் வெளியிடப்படடுள்ளது.
Loading...
குறித்த விடயத்தை கடிதம் மூலம் பங்களாதேஸ் கிரிக்கெட் சபையின் தலைவருக்கும் தெரியப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி சந்திக்க ஹத்துருசிங்க, வெகு விரைவில் இலங்கை அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Loading...