தீவகப் பகுதிகளைப் பொறுத்தவரையில், வரட்சிக்கு ஈடுகொடுக்கும் வகையிலான பயிர் செய்கை ஊக்குவிக்கவேண்டும் என டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் குறித்த பகுதி மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் வகையிலும் தென்னை, மரமுந்திரி, பேரீட்சை போன்ற பயிரினங்களை பண்ணை முறைமை ரீதியிலும் வீட்டுத் தோட்டச் செய்கைகள் என்ற ரீதியிலும் பயிரிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமானதெனவும் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இறப்பர் பயிர்ச் செய்கை மேற்கொள்வது குறித்து ஏற்கனவே பிரஸ்தாபிக்கப்பட்டிருந்ததாகவும் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளார்.
எனவே குறித்த ஏற்பாடுகள் தற்போது எத்தகைய நிலையில் இருக்கின்றன என்பது குறித்து கௌரவ அமைச்சர் அறியத் தர வேண்மெனவும் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், இத்தகைய எற்பாடுகள் அங்கு மேற்கொள்ளப்படுகின்ற நிலையில், தற்போது வறுமை நிலையினை அதிகம் கொண்டுள்ள குறித்த மாவட்டங்களின் மக்களுக்கு பொருளாதார ரீதியில் மிகுந்த நன்மை பயக்கக்கூடிய ஏற்பாடுகளே தேவை என்பதையும் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.