பார்சிலோனாவிற்கு எதிரான ஆட்டம் முடிந்த பின்னர் யுவான்டஸ் அணித் தலைவரும், கோல் காப்பாளருமான இத்தாலியின் முன்னாள் வீரர் பபன் ரசிகரை நோக்கி தனது காற்சட்டையை தூக்கி வீசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஐரோப்பிய கால்பந்து பெடரேஷன் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற போட்டி ஒன்றில் ஸ்பெய்ன் நாட்டின் முன்னணி கால்பந்து அணியான பார்சிலோனாவும், இத்தாலியின் முன்னணி கழக அணியான யுவான்டஸ் அணியும் மோதின. இந்த ஆட்டம் சமநிலையில் முடிந்தது.
சமநிலையில் முடிந்ததால் பார்சிலோனா அணி காலிறுதிக்கு முந்தைய 16 அணிகள் கொண்ட சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
யுவான்டஸ் இன்னும் 16 அணிகள் கொண்ட சுற்றுக்கு முன்னேறவில்லை. வழக்கமாக போட்டி முடிந்த பின்னர் வீரர்கள் ஒருவருக் கொருவர் கட்டிப்பிடித்து கொள்வார்கள். பின்னர், தாங்கள் அணிந்திருக்கும் ஜெர்சியை ரசிகர்கள் நோக்கி வீசுவார்கள்.
நேற்றைய போட்டியில் யுவான்டஸ் தலைவரும், இத்தாலி அணியின் முன்னாள் தலைசிறந்த கோல் காப்பாளருமான பபன், யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென தன்னுடைய காற்சட்டையை கழற்றி கோல் கம்பத்திற்கு பின்னால் இருந்த ரசிகரை நோக்கி வீசினார்.
பின்னர் உள்ளாடையுடன் வேகமாக யுவான்டஸ் வீரர்கள் அறையை நோக்கி ஓடினார். இது அங்குள்ளவர்களுக்கு வேடிக்கையாக இருந்தது.