Loading...
மதுபானம் மற்றும் புகையிலைப் பாவனையைக் குறைப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை கௌரவித்து உலக சுகாதார தாபனத்தினால் வருடாந்தம் வழங்கப்படும் விசேட விருதான புகைத்தலுக்கு எதிரான சர்வதேச தின விருது மூன்றாவது முறையாகவும் இலங்கைக்குக் கிடைத்துள்ளது.
இம்முறை இவ்விருது புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான அதிகார சபைக்குக் கிடைத்துள்ளது. நேற்றுமுன்தினம் (23) முற்பகல் பத்தரமுல்லையிலுள்ள வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் வைத்து உலக சுகாதார தாபனத்தின் கிழக்காசியப் பிராந்தியப் பணிப்பாளர்
Loading...
கலாநிதி பூனம் கெற்றாபல் சிங் அவர்களினால் இவ்விருது உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
ஜனாதிபதி இவ்விருதை புகையிலை, மதுபானம் தொடர்பான அதிகார சபையின் தலைவர் பாலித்த அபேகோனிடம் கையளித்தார்.
Loading...