பருத்தித்துறை முதலாம் கட்டை பகுதியைச் சேர்ந்த சிதம்பரப்பிள்ளை சிவபாலன் ( வயது 48) என்பவவ் டிப்பரால் இடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பேக்கரி உரிமையாளரான இவர் இன்று சனிக்கிழமை அதிகாலை 1.45 மணியளவில் அவரது நண்பர்களுடன் மதுபானம் அருந்திக்கொண்டிருந்ததாகவும் தெரிவிக்க்ப்படுகின்றது.
அதன் போது ஏற்பட்ட தகராற்றின் பின்னர், அவர் அங்கிருந் சென்ற சமயம், அவரது எதிரியான டிப்பர் சாரதி, டிப்பரால் மோதி கொலை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்து
சிவபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தின் பின்னர், 43 வயதுடைய சாரதி பருத்தித்துறை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், உயிரிழந்த சிதம்பரபிள்ளை சிவபாலன் 3 பிள்ளைகளின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.