தமிழீழ விடுதலைப் புலிகள் புதைத்து வைத்துள்ளதாக கூறப்படும், தங்கம் மற்றும் ஆயுதங்கள் குறித்த தகவலின் அடிப்படையில், இன்று முல்லைத்தீவு – சுகந்திபுரம் – நிரோஸன் விளையாட்டரங்கின் சில இடங்களில் தோண்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு அமையவே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால், அங்கு ஆயுதங்களோ, தங்கமோ இல்லை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப் படையின் குண்டும் செயழிழக்கச் செய்யும் பிரிவினரே தோண்டும் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யுத்தம் நிறைவடைந்த போது, தப்பிச் சென்ற விடுதலை புலி உறுப்பினர்கள் மீண்டும், சமூகமயமாக முடியும் என்ற நினைத்துக் கொண்டு முல்லைத்தீவில் இரகசிய இடங்களில் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தை புதைத்துச் சென்றிருக்க வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.