சினிமாவில் கெட்ட அனுபவத்தை சந்தித்தது இல்லை என்று பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தெரிவித்துள்ளார்.
நடிகை சன்னி லியோன் தற்போது நடிகர் அர்பாஸ் கானுடன் ‘தேரா இந்தேஜார்’ என்ற இந்திப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. இதில், நடிகை சன்னி லியோன் கலந்து கொண்டார். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
என்னை பொறுத்தவரையில், சினிமாவில் கெட்ட அனுபவத்தை சந்தித்தது இல்லை. இதற்காக கடவுளுக்கு நன்றி. இருந்தாலும், சினிமாவில் உள்ள சிலர், மோசமான அனுபவத்தை சந்தித்து இருப்பதாக அறிகிறேன். இதுபற்றி செய்திகளிலும் படித்தேன்.
என்னுடைய கணவரை எப்போதும் என் கூடவே வைத்திருப்பேன். அவர் என்னை நன்கு வழிநடத்துகிறார். ஏதாவது முட்டாள்தனமான காரியங்கள் நடந்தாலும், அவர் குறுக்கிட்டு தடுத்துவிடுவார். எனக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாததை உறுதிசெய்கிறார்.
அலுவலகம் ஆனாலும் சரி, பொது இடமானாலும் சரி, பெண்கள் தங்களுக்கு நேரிடும் மோசமான சம்பவங்களை துணிச்சலாக பேச வேண்டும். அப்போது தான் பயத்தில் இருக்கும் மற்ற பெண்களுக்கும் தைரியம் பிறக்கும். நீங்கள் அவர்களுக்கு நல்ல முன் உதாரணமாக திகழ்வீர்கள்.
திருமணமாகி குழந்தை பெற்ற பின்னரும் நடிகை கரீனா கபூர் அழகாகவும், ‘செக்சி’யாகவும் இருக்கிறார். இன்றைக்கும் சுறுசுறுப்பாக நடிக்கிறார். பெண்கள் தாயான பிறகு வலிமையாகவும், சுதந்திரமாகவும், குழந்தைகளை பராமரித்து கொண்டும் நடிப்பில் கவனம் செலுத்துகிறார்கள். கரீனாகபூர் இதற்கு சிறந்த உதாரணம் இவ்வாறு சன்னி லியோன் தெரிவித்தார்.