தாம் வெறுமனே ஒரு அரசியலமைப்பைப் பெற வேண்டும் என்பதற்காகப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு சமுதாயம் அல்ல என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற இடைக்கால அறிக்கை தொடர்பிலான தெளிவூட்டல் கலந்துரையாடல் நிகழ்வின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், எமது இனத்தை முழுமையாக மிகப் பெரிய ஆகூதியிலே நீத்தவர்கள் நாங்கள்.
அவ்வாறான வரலாற்றைக் கொண்டிருக்கும் நாங்கள் மிகவும் எச்சரிக்கையாகச் செயற்பட வேண்டியதே இந்தச் சந்தர்ப்பம், இது வாராது வந்த சந்தர்ப்பம் என அவர் குறிப்பிட்டார்.
இதன்போது, அவர் மேலும் தெரிவிக்கையில், பன்மைத்துவம் கொண்ட நாட்டிற்கு எவ்வாறானதொரு அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக தென்னாபிரிக்காவினுடைய அரசியலமைப்புச் சட்டத்தைப் பார்க்கின்றோம் என்று அவர் குறிப்பிட்டார்