அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரத்தில் இடம்பெற்ற பிரபஞ்ச அழகி போட்டியின் இறுதி 16 பேருக்குள் இலங்கை பெண்ணும்
இடம்பிடித்துள்ளார்.
இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய கிறிஸ்டினா பீரிஸ் என்பவரே குறித்த போட்டியில் 16வது இடத்தை பிடித்துள்ளார்.
லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற பிரபஞ்ச அழகிப் போட்டி நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
இதன்போது பிரபஞ்ச அழகியாக தென்னாபிரிக்காவை சேர்ந்த பெண் தெரிவானார்.
23 வயதான கிறிஸ்டினா மாடல் அழகியாக எமிர் நாட்டில் செயற்பட்டு வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
போட்டி மூலம் கிடைத்த பணத்தின் ஒரு பகுதியை புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கிறிஸ்டினா செலவிடுகின்றார். அவரது தாயார், பாட்டி மற்றும் தாத்தா ஆகியோர் புற்று நோயினால் உயிரிழந்துள்ளனர்.
கிறிஸ்டினா 2017ஆம் ஆண்டு இடம்பெற்ற பிரபஞ்ச போட்டிக்கான இலங்கை போட்டியில் முதல் இடம்பிடித்தமை குறிப்பிடத்தக்கது.