கிழக்கு மாகாண ஆசிரியர் நியமனத்தில் உள்வாங்கப்படாத பட்டதாரிகள் இன்றைய தினம் மட்டக்களப்பு காந்திப் பூங்கா அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ் அரசியல்வாதிகளும் ஆளுனரும் தங்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டதாகவும் பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் ஆசிரிய நியமனப்பரீட்சையில் 40 புள்ளிகளுக்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்ற அனைவருக்கும் நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகள் மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
தங்களது பிரச்சினை தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுனர் நோஹித்த போகொக்கலாகமவூக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியூள்ளதாகவும், இதன் பிரதிகள் கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஜீ.கே. முத்துபண்டாவுக்கும் அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.