தமிழ்மக்கள் தங்களை உணரத் தொடங்கிவிட்டார்கள் என வடக்;க மகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற மாவீரர்களின் எழுச்சி நாள் நிகழ்வுக்ன தொடர்பில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே விக்கினேஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் தமிழ் மக்கள் தங்கள் சக்தியை உணரத் தொடங்கி விட்டார்கள் என தெரிவித்த விக்கினேஸ்வரன் அவர்களது; உரித்துக்கள் என்ன என்பதையும் உணரத் தொடங்கிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய நிகழ்ச்சிகள் துயிலும் இல்லங்களில் மட்டும் நடைபெறவில்லை என தெரிவித்துள்ள விக்கினேஸ்வரன் கோயில்களில், குடும்ப இல்லங்களில் எல்லாம் தீபச் சுடர் ஏற்றி எமது விடுதலை வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிடடுள்ளார்.
நல்லாட்சி கொண்டுவந்த அரசாங்கத்தால் வல்லாட்சியின் வசம் திரும்ப முடியாததால் முன்னைய அரசாங்க காலத்தில் இருந்த கெடுபிடிகள் குறைந்திருந்ததாகவும் விக்கினேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் மாவீரர்களை மலினப்படுத்துவதே மக்களின் மனோநிலை என்றிருந்தால் இவ்வளவு எழுச்சியைக் காட்டியிருக்கமாட்டார்கள் எனவும் விக்கினேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.
முன்னைய வருடங்களிலும் பார்க்க உணர்வலை இவ்வருடம் கூடியதற்கான காரணங்கள் இரண்டிருப்பதாகத் உள்ளதாக தெரிவித்த விக்கினேஸ்வரன்
ஒன்று உள்ளேயிருந்த உணர்ச்சிகளை இது வரை காலமும் எம் மக்கள் தடைபோட்டு வைத்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அவ்வாறு தடை போடத் தேவையில்லை என்றவாறு அரசியல் நிலைமாற்றம் அடைந்ததும் தமது உணர்ச்சிகளை ஊர் அறிய உலகறிய மக்கள் வெளிக்காட்டியுள்ளதாகவும் வடக்குமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.