மியான்மர் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ள போப் ஃபிரான்சிஸ், அனைத்து இனக் குழுக்களுக்கும் மரியாதை வேண்டும் என வலியுறுத்தியுள்ளபோதும், ரோஹிஞ்சா முஸ்லிம்கள் என்று குறிப்பிட்டுக் கூறுவதை போப் ஃபிரான்சிஸ் தவித்துள்ளார்.
குறித்த இனத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ‘ரோஹிஞ்சா முஸ்லிம்கள்’ எனும் பதத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று மனித உரிமைகள் குழுக்கள் வலியுறுத்தியிருந்தபோதும், அந்தப் பதத்தைப் பயன்படுத்துவது, அந்நாட்டில் வாழும் கத்தோலிக்கர்களுக்கு சிக்கல்களை உண்டாக்கும் என்று மியான்மரில் உள்ள கத்தோலிக்கத் திருச்சபை போப்பிடம் கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இனச் சுத்திகரிப்பில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள மியான்மரில் நடக்கும் வன்முறைச் சம்பவங்களில் இருந்து தப்ப, சுமார் 6.2 லட்சம் ரோஹிஞ்சாக்கள் அண்டை நாடான வங்கதேசத்தில் தஞ்சம் அடைந்துள்ளது அனைவரும் அறிந்ததே
‘ரோஹிஞ்சா’ எனும் பதத்தை அங்கீகரிக்க மறுக்கும் மியான்மர் அரசு அவர்களை ‘வங்காளிகள்’ என்று அழைக்கின்றமையும் குறிப்பிடத்தக்து.
அவர்களை வங்கதேசத்தில் இருந்து வந்த சட்டவிரோதக் குடியேறிகள் என்றும், அவர்களை பூர்வக் குடிகளாக கருத முடியாது என்றும் அந்நாட்டு அரசு கூறிவருகின்றது.
இன்நிலியில் போப் ஃபிரான்சிஸிசும் ‘ரோஹிஞ்சா முஸ்லிம்கள்’ என்ற பதத்தை பயன் படுத்தவில்லை.
ரோஹிஞ்சாக்கள் பற்றி போப் எதையும் குறிப்பிட்டுப் பேசாதபோதும், அவர்களின் பூர்வீக உரிமைகளுக்கு வலிமையான ஆதரவு தரும் வகையில் அவரது உரை அமைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.