கனடாவை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய கண்களுக்குள் பச்சைக் குத்திக் கொண்டதால் மிகவும் கஸ்டப்பட்டு வருகிறார்.
கேட் காலிங்கர் என்ற பெயருடைய குறித்த பெண் தற்போது தன்னுடைய பார்வையை இழந்துள்ளார்.
அந்த பெண் தன்னுடைய காதலன் எரிக் பிரவுன் தனது கண்களில் பச்சை குத்திக் கொண்டதால் அவரும் அப்படி பச்சைக் குத்திக் கொண்டதாக கூறப்படுகிறது.
தற்போது இதுவே இவர்கள் காதலுக்கு இடையில் பிரச்சனையை உருவாக்கியுள்ளது.
கண்களில் பச்சை குத்தும் இது போன்ற புதிய டிரெண்ட் தற்போது உலகம் முழுக்க வைரல் ஆகி வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.
தற்போது அந்த பெண் இதற்காக தீவிர சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கண்களில் பச்சைக் குத்தும் ரகசியம் தற்போது கண்களில் கலர் கலராக பச்சை குத்துவதுதான் டிரெண்ட். இது மிகவும் கடினமான வேலை ஆகும்.
கண்கள் வலிக்காமல் இருக்க ஊசி போட்ட பின் எந்த நிறம் வேண்டுமோ அந்த நிறத்தில் மிகவும் சூடான கலவையை கண்களில் மெதுவாக பாய்ச்சுவார்கள்.
என்னதான் வலிக்காமல் இருக்க ஊசி போட்டாலும் அந்த நேரத்தில் வலி மிகவும் அதிகமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதுமட்டும் இல்லாமல் இதைச் செய்வதற்கு லட்சக்கணக்கில் செலவு ஆகும்.
மேலும் கண்களை சில மாதத்திற்கு மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
காதலுக்காக பச்சை குத்திய பெண் கனடாவை சேர்ந்த கேட் காலிங்கர் என்ற பெண் தன்னுடைய காதலன் எரிக் பிரவுன் விருப்பத்தின் பேரில் கண்களில் பச்சைக் குத்த முடிவு செய்து இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரது காதலன் தனது கண்களில் ‘பிங்க்’ நிறத்தில் பச்சை குத்தி இருக்கிறார். ஆகவே இந்த பெண் தனது கண்களில் ‘பர்பிள்’ நிறத்தில் பச்சை குத்த முடிவு செய்து இருக்கிறார்.
மேலும் அவர் காதலனே பச்சை குத்தி விடுவதாகவும் கூறி உள்ளார். கண்களில் வீக்கம் இந்த நிலையில் பச்சை குத்திய பின் அந்த பெண்ணுக்கு கண்களில் சில நாளில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.
ஒரு கண் மட்டும் ‘பர்பிள்’ நிறத்தில் வீக்கம் அடைந்து இருக்கிறது. மேலும் தினமும் அவருக்கு அதே கலரில் கண்ணீரும் வந்துள்ளது.
அவரது காதலன் பச்சை குத்தும் போது முக்கியமான பாதுகாப்பு திரவம் ஒன்றை கலக்க மறந்துவிட்டதாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பார்வை போனது தற்போது மருத்துவர்கள் அந்த பெண்ணின் கண்களை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இல்லையென்றால் மற்றொரு கண்ணும் இதன் காரணமாக பாதிப்படைய வாய்ப்பு இருக்கிறதாம். இந்த பிரச்சனை காரணமாக காதலர்கள் இருவருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டு பிரிந்து இருக்கிறார்கள்.
மேலும் கேட் தன் முன்னாள் காதலன் எரிக் மீது வழக்கு தொடுக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.