Loading...
திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான பாரிய திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அலுவல்கள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
திருகோணமலை துறைமுகத்தை சுற்றுலாத்துறையுடன் தொடர்புபடுத்த முடியுமாயின் சுற்றலாத் துறையை மேம்படுத்த முடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
Loading...
வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை துறைமுகம் சார்ந்த நடவடிக்கைகளில் பாரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், கப்பல் போக்குவரத்து தொடர்பான தேசிய செயற்திட்டம் தயாரிக்கப்படவிருப்பதாகவும் தெரிவித்த அவர், இந்த ஆண்டில் துறைமுக அதிகார சபை 110 கோடி இலாபம் ஈட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
Loading...