தேச துரோகியாவதற்கு தான் ஜனாதிபதியாக நியமிக்கப்படவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தென் கொரியாவில் வசிக்கும் இலங்கை பிரஜைகளை சந்தித்து கலந்துரையாடும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சமஸ்ட்டி அதிகாரத்தை பெற்றுக்கொடுப்பதற்கோ அல்லது நாட்டை பிளவுப்படுத்துவதற்கான அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதற்கோ தாம் தயார் இல்லை எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் நிலவிய மோசமான நிலையை மாற்றுவதற்கே தான் ஜனாதிபதியாக நியமனம் பெற்றதாக மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.
வரலாற்றில் இடம்பெற்ற தவறுகளை திருத்தி வாழ்நாள் முழுதும் துன்பத்தில் வாடும் இலங்கையர்களுக்கு சமாதானத்தையும் , அன்யோணியத்தை ஏற்படுத்துவதற்கான சிறந்த சூழலை கட்டியெழுப்புவதே தனது நோக்கம் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேசத்தின் அனைத்து நாடுகளின் நன்மதிப்பையும் தற்போது இலங்கை பெற்றுக் கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.