மணல் மற்றும் கிரானைட் குவாரிகளுக்கு விதிக்கப்பட்ட தடை வரவேற்கத்தக்கது என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதத்துக்குள் மூட வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இன்று உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டையைச் சேர்ந்த ராமையா என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் இந்த உத்தரவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, தொல். திருமாவளவன் உள்பட பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்,
மணல் மற்றும் கிரானைட் குவாரிகளுக்கு விதிக்கப்பட்ட தடை வரவேற்கத்தக்கது. எம். சாண்ட் மணலை அதிகளவில் கொண்டு வரும் நடவடிக்கையை அரசு ஏற்படுத்த வேண்டும்.
உயர் நீதிமன்ற கிளை தீர்ப்பை அமல்படுத்தும் பணிகளில் தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.