Loading...
வடக்கின் நிலமைகள் தொடர்பாக ஆராயும் பொருட்டு அவுஸ்ரேலியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் பீரின் கஸ்ரன் அடங்கிய குழுவினர் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
யாழ் கைதடியிலுள்ள வடக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் குறித்த சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது.
Loading...
சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பாக இக்குழு முதலமைச்சருடன் கலந்துரையாடியதுடன் அவுஸ்ரேலிய அரசின் நிதியுதவியில் வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் குறித்த தூதுக்குழுவினர் முதலமைச்சருக்கு விளக்கமளித்துள்ளனர்.
வடமாகாண முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளர் திருமதி ரூபினி வரதலிங்கம் உள்ளிட்ட சிலர் இச்சந்திப்பில் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Loading...