இம்முறை வாக்காளர் பட்டியலில் தமது பெயர் இல்லையாயின் அல்லது தகுதியற்ற ஒருவரின் பெயர் உள்ளடக்கப்பட்டிருப்பின், டிசம்பர் 5ம் திகதிக்கு முன்னர் தெரியப்படுத்துமாறு, தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
மேலும், விரைவில் நடைபெறவுள்ள 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களுக்காக, இவ் வருடத்திற்கான வாக்காளர் பட்டியலே பயன்படுத்தப்படவுள்ளதாக, சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த பட்டியல் தற்போது மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளால், சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் எனவும், அவர்கள் கூறியுள்ளனர்.
இதில், தமது பெயர் இல்லையாயின் அல்லது தகுதியற்ற ஒருவரின் பெயர் இருப்பின், அது பற்றி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிக்கு எழுத்து மூலம் தெரியப்படுத்துமாறு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.