வடக்கு மாகாணசபை உறுப்பினரான கனகரட்ணம் விந்தன் தனது 2017 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின் மூலம் யாழ். மண்டைதீவு றோ.க வித்தியாலயத்திற்கு தளபாடக் கொள்வனவுக்காக இரண்டு இலட்சம் ரூபா ஒதுக்கியிருந்தார்.
போரிற்கு முன்னரான காலங்களில் தரம் 11 வரையும் இயங்கி வந்த குறித்த பாடசாலையானது, போரிற்குப் பின்னராக தரம் 5 வரையும் இயங்கி வந்தமையைத் தொடர்ந்து, இவ்வாண்டில் தரம் 6 ஆகவும் தொடரும் ஆண்டுகளில் ஒவ்வொரு வகுப்பாக தரம் 11 வரையும் உயரவிருக்கும் இப் பாடசாலைக்கு தரம் 6 மாணவர்களுக்காக 25 மேசை கதிரைகளை வடக்கு மாகாணசபை உறுப்பினர் கனகரட்ணம் விந்தன் அவர்கள் வழங்கி வைத்துள்ளார்.
நேற்றையதினம் பாடசாலையின் அதிபர் ஜோண் கொலின் தலைமையில் நடைபெற்ற கையளிப்பு நிகழ்வில், தீவக மறைக்கோட்ட குருமுதல்வரும் மண்டைதீவு – அல்லைப்பிட்டி பங்குத்தந்தையுமாகிய அருட்பணி மனுவேற்பிள்ளை டேவிட் அடிகளார், அகில இலங்கை தமாதான நீதவான் திருமதி தங்கராணி அமிர்தநாதர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு அங்கத்தவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.