எதிர்வரும் டிசம்பர் 17ம் திகதி சீன நாட்டைச் சேர்ந்த 100 ஜோடிகளுக்கு கொழும்பு – நகர மண்டபப் பகுதியில் வைத்து திருமணம் செய்து வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சம்பிக்க ரணவக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த சீன ஜோடிகளுக்கு இலங்கை முறைப்படி திருமணம் நடத்தி வைக்கப்படவுள்ளதாகவும் சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த மாபெரும் திருமண நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளதாகவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த முடியும் எனவும் சம்பிக்க ரணவக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.