சிவா-அஜித் கூட்டணியில் 4வது முறையாக புதுப்படம் தயாராக இருக்கிறது.
ரசிகர்களிடம் எந்த ஒரு பரபரப்பையும் ஏற்படுத்தாமல் படக்குழு இப்படத்தின் பெயர் விசுவாசம் என்று அதிரடியாக வெளியிட்டனர்.
மற்றபடி படத்தின் நாயகி மற்றும் இசையமைப்பாளர் இன்னும் உறுதியாகவில்லை.
இந்த நிலையில் இப்படத்தின் ஃபஸ்ட் லுக் தயாராகிவிட்டதாகவும், ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அது என்னவென்றால் இதுவரை சால்ட் அன் பெப்பர் லுக்கில் நடித்த அஜித் இப்படத்திற்காக கருப்பு நிற தலைமுடியில் நடிக்க இருக்கிறாராம்.
அதோடு விவேகம் படத்தை விட இப்படத்தில் எடையை இன்னும் குறைக்க இருக்கிறாராம். ஃபஸ்ட் லுக்கில் புதுவித லுக்கில் அஜித் இருப்பார் என்று தெரிகிறது.
மேலும், இப்படத்தில் நடிக்க கீர்த்தி சுரேசிடம் பேச்சு வார்த்தை நடப்பதாக கூறப்பட்டது, ஆனால், இறுதியாக அனுஸ்காவை ஹீரோயினாக கமிட் செய்துள்ளார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.